Mon Msn

Mon Msn
kuruvi90@live.fr
[ Ajouter un commentaire ] [ Aucun commentaire ]

# Posté le samedi 29 août 2009 08:32

செல்ஃபோன் கொஞ்சல்கள்

செல்ஃபோன் கொஞ்சல்கள்
பொதுவான விசாரிப்புகளோடு
மெதுவாய் துவங்கும்
நம் தொலைபேசி உரையாடல்கள்...

நத்தையின் வேகத்தைப் போல்,
வார்த்தைகள் நகர,
சிறுத்தையின் வேகத்தை போல்,
நிமிடங்கள் நகர,
அர்த்தங்களின்றி பேசிக்கொண்டு இருப்போம்.

உன் புன்னகையை ரசிக்க வேண்டும்
என்பதற்காக ஏதேதோ சொல்வேன் நான்.
புன்னகைப்பதே தெரியாமல் புன்னகைப்பாய்.
அது எப்படி உன்னால் மட்டும் முடிகிறது?
கல் நெஞ்சம்தான் உனக்கு....

எதையாவது சொல்லிவிடுவாய்..
என்னவென்று கேட்டால்
ஒன்றும் இல்லை என்பாய்.
திமிரின் மொத்தமும் நீதான்.

மொட்டை மாடியில் அமர்ந்து
உன்னுடன் பேசிக்கொண்டு இருக்கையில்
என்னுடன் வந்து அமர்ந்து கொள்கிறது நிலா.
நீ பேசுவதை ஒட்டுக்கேட்க...

உன் வார்த்தை கேட்கும் நேரங்களில்
மோட்சம் பெறுகின்றன என் செவிகள்.
என்ன பாவம் செய்தது என் இதழ்கள்?

தனிமையிலே இனிமை காண முடியுமா?
ஏன் முடியாது..
எனக்கு ஒரு செல்ஃபோன் கொடுத்து
செவ்வாய் கிரகத்தில் விட்டுவிட்டால் கூட
இனிமை காண்பேன்.

யார் SMS அனுப்பினாலும்
அது நீயாய் இருக்க கூடாதா
என்றே மனம் அடித்து கொள்கிறது.

நீ அழைக்கையில் மட்டும் ஒலிக்கும் பாடல்,
வந்திருப்பது கால் அல்ல,
காதல் என்று சொல்லிப் போகிறது

உனக்கான ரிங்டோன்,
உனக்கான SMS டோன்,
உன் அழைப்புக்கான புகைப்படம்
என ஒவ்வொன்றாக அலங்கரித்து வைத்திருப்பேன்.

ஆனால் உன்னிடமிருந்து
எதுவுமே வருவதில்லை.
கேட்டால் "காத்திருத்தல் சுகம்' என சொல்வாய்.
அதை "வலி" என்று எப்படி
உனக்கு புரிய வைப்பது?

பீட்ஸா'வுக்காக காத்திருப்பதில்
வேண்டுமானால் சுகம் இருக்கலாம்.
ஆனால் நான் உணவுக்காக காத்திருக்கிறேன்,
அதுவும் பலநாள் பட்டினியுடன்..

என்னுடன் பேசும் நேரங்களில்
இயர் ஃபோன் மாட்டி கொள்ளாதே.
உன் இதழ்களின் அருகாமையை
உணர முடியாமல்
தவிக்கிறது என் மனம்.

அதனால் தான் ஃ போனை
"அருகில் வைத்து பேசு,
அருகில் வைத்து பேசு" என்பேன்.
மற்றபடி ஒன்றுமே கேட்கவில்லை
என்று நான் சொல்வதெல்லாம் பொய்.
அது உனக்கும் தெரியும்..

ஒரு மணி நேரமாய் என்ன பேசினோம்?
அப்புறம்... என்ற வார்த்தையை மட்டும்
ஆயிரம் முறையாவது சொல்லி இருப்போம். ௦௦௦௦௦

நீயாக கொடுப்பாய் என நானும்,
நானாக கொடுப்பேன் என நீயும்,
"அப்புறம் அப்புறம்" என்று வார்த்தைகளை அப்புறப்படுத்தியபடியே பேசிக்கொண்டு இருப்போம்.

கொடுக்காத முத்தத்திற்காக நீயும்,
பெறாத முத்தத்திற்காக நானும்,
தயக்கமுலாம் பூசியபடியே
பேசிக்கொண்டு இருப்போம்.

கடைசிவரை இருவரது
இதழ் சிறைகளில் இருந்தும்
முத்தப்பறவை விடுதலை ஆவதே இல்லை.

ம்ம்ம்ம்ம்.... பார்க்கலாம்...
நமக்குள் நடக்கும் இந்த நாடகம்
எப்போது முடிவுக்கு வருகிறது என்று?

வேண்டாம்.. வேண்டாம்..
அது தொடரட்டுமே
இதுவும்
சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது

-::-மயூரன்-::-
கவிதையின் காதலன்

# Posté le lundi 25 mai 2009 10:13

உன்னை பிரிந்திருக்கிறேன் வருவயா என் இதழ் அருகே!

விழியிலிருந்து கூட
வியர்வை வழிகிறது.
அவைகள் உன்னை தேடி தேடியே
களைத்துப் போய்விட்டன.
ஆம் நான் உன்னைப் பிரிந்திருக்கிறேன்.

உன்னை நியாபகப்படுத்தும்
அத்தனையும் என்னிடம் இருக்கின்றன,
உன்னைத்தவிர...

ஆயிரம் ரூபாய் கொடுத்தால்
ஆட்களை கொல்லக் கூட
இங்கு ஆட்கள் இருக்கிறார்கள்.
ஆனால் என்னை தினம் தினம் கொல்லும்
உன் நினைவுகளை கொல்ல யார் இருக்கிறார்கள்?
இருந்தால் சொல்
லட்ச ரூபாய் தருகிறேன்.

சிறு இரும்பை திருடினால் கூட
இங்கு தண்டனை உண்டு
அது எப்படி என் இதயத்தையே திருடியும்
நீ தண்டனையிலிருந்து தப்பித்தாய்?

இரு இரு என் இ.பி.கோ.வில்
நிச்சயம் உனக்கு தண்டனை உண்டு.
ஆம்.
என் (இ)தயம் (பி)டிக்கும் (கோ)ர்ட்டில்
சட்ட எண் 143' ன் கீழ் என்ன
தண்டனை தெரியுமா?

உன் காதுகளை கொடு சொல்கிறேன்.

என்ன புரிந்ததா?

உன்னை பிரிந்திருக்கும் வேளையில்
நீ எனக்கு எழுதிய கடிதத்தில்
உன் விரல்கள் பிரசவித்த வார்த்தைகளை
வாசித்து வாசித்தே கழிக்கிறது என் பொழுது.

தினம் தினம் என் இதழ் செடிக்கு
முத்த "நீ"ரூற்றுவாய்.
இப்போது பார் என் இதழ் செடி
காய்ந்து கிடப்பதை.
உன்னை பிரிந்திருப்பதை
என் இதழ்களும் விரும்பவில்லை.

எனக்காக கூட நீ வர வேண்டாம்..
தயவு செய்து என் இதழ்களுக்காகவாவது
ஒரு முறை என்னை சந்திக்க வா...


இப்படிக்கு
-::-மயூரன்-::-
உன் அருகில் நான் இருந்த பொழுதுகள்
உன்னை பிரிந்திருக்கிறேன் வருவயா என் இதழ் அருகே!

# Posté le lundi 25 mai 2009 10:10

எப்போதேனும் எனைக் கடக்க நேர்ந்தால்!!

எப்போதேனும் எனைக் கடக்க நேர்ந்தால்!!
நீ கடைசியாகப் பறித்துப் போட்ட
உன்
புன்னகைப்பூ ,
என் படுக்கையருகில்
சலனமற்றுக் கிடக்கிறது.

உனக்குள் இடம்பெயர்ந்த
என்
2இதயத்தின் இன்னொரு பாதி
திரும்பி என்
தெருவோரம் வரை வந்துவிட்டது.

நீ எனக்குள்
இறக்குமதி செய்திருந்த
கள்ளி முட்கள் எல்லாம்
முனை ஒடிந்து
மட்கிப் போய்விட்டன.

தொடுவானம்
தொட ஓடிய
நினைவுப் புள்ளிமான்களை எல்லாம்
திரும்ப என்
கூட்டுக்குள் அடைத்து
தாழிட்டாகிவிட்டது.

மழையில் கரைந்த
பாதி ஓவியமாய் தான்
இப்போதெல்லாம்
உன்
மீதி நினைவுகள்
மிதந்து கொண்டிருக்கின்றன.

காதலின்
வெட்டுக்காயங்களை எல்லாம்
நிகழ்வின் தசைகள் வந்து
நிவர்த்திவிட்டன.

வேதனைகளின் முடிவுரையாய்
ஒரே ஒரு வேண்டுகோள் மட்டும்.

எப்போதேனும்
எனைக் கடக்க நேர்ந்தால்
எதிரியாய் பாவித்துப் போ.
இன்னொரு புன்னகையை மட்டும்
பறித்துப் போடாதே..

[ Ajouter un commentaire ] [ Aucun commentaire ]

# Posté le lundi 25 mai 2009 10:07

உன் ஓவ்வொரு ஊடலின் போதும் உருக்குலைந்து போகிறது

உன் ஓவ்வொரு ஊடலின் போதும் உருக்குலைந்து போகிறது
உன் ஓவ்வொரு ஊடலின்
போதும் உருக்குலைந்து
போகிறது
என்னுள் உறைந்து போய்
இருக்கும் உன்னைப்பற்றிய
என் கனவுகளும் கற்பனைகளும்..

என் உயிர் துடிப்பில்
உன் ஊடுருவலை
இந்த ஊடல்கள்
ஒன்றும் செய்யாது
உள்ள கிடக்கில்
ஊமை தாகங்கள்
நீ பருகும் வரை
பாழாகாது
ஏக்கம் கொண்ட
ஏராளக் கனவுகள்
உன்னை காணும் வரை
கலையாது
அடிமையானேன் உன்
ஆணவப் பார்வையில்
நீ புரட்சி புயலே ஆனாலும்
இந்த பூவின் வசம்
தான் உந்தன் வாசம்
*******

வலிக்கிறது காதலா வலிக்கிறது
வாஞ்சை கொண்ட
உன் ஒரு சொல்
கேளாது
வலிக்கிறது காதலா வலிக்கிறது
என்னை வருடிவிடும்
வார்த்தை ஒன்று
நீ சொல்லாது
வலிக்கிறது காதலா வலிக்கிறது
வஞ்சியிவள் குரல் கேட்க நீ மறுப்பது வலிக்கிறது
உன் வாய் மொழி கேளாமல்
வாழ்க்கை அது கசக்கிறது
*******



-::-மயூரன்-::-

# Posté le lundi 25 mai 2009 09:59

Marseille -OM

Marseille   -OM

# Posté le dimanche 22 mars 2009 11:25

விஜய் இது உங்களுக்கே ஓவரா இல்லையா?


ஒரு சில படங்கள்ல ஒரு சில விஷயங்கள் அன்வோன்டட்டா இருக்கும். அப்படி இல்ல இந்த படத்துல(வில்லு). ஏய்..... பேசிட்டிருக்கேன்... சைலன்ஸ்...... என்று கடும் கோபத்துடன் கத்தத்தொடங்கிய விஜய் தோல்வியை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இல்லாதவர் என்பதை ஊடகவியலாளர் சந்திப்பில் வெளிப்படுத்தியிருக்கிறார்.

தோல்வியை தாங்கிக் கொள்ள முடியாத விளையாட்டு வீரனும் சரி நட்சத்திரங்களும் சரி உண்மையான ஹீரோவாக முடியுமா?

இளையதளபதி இறுதியாக நடித்த படங்களில் போக்கிரிக்கு பிறகு எதுவுமே பேசக்கூடிய அளவில் ஓடாதது பணத்தை சம்பாதித்;ததோ இல்லையோ ரசிகர்களின் அதிருப்தியை அதிகமாகவே சம்பாதித்திருக்கும்.

அடுத்த சூப்பர் ஸ்டாராகும் வாய்பபு இருப்பதாக சொல்லப்படும் ஒருவர், தனக்கென்று கொடி வடிவமைத்து அரசியலுக்கு அடிக்கல் நாட்டியவர் பொது இடத்தில் இப்படியா நடந்து கொள்வது.

வித்தியாசமான கெட்டப்பில் வித்தியாசமான பாத்திரங்களில் தன்னால் நடிக்க முடியும் என்பதை விஜய் இன்னும் நிரூபிக்கவில்லை. ஒரே விதமான மசாலா திரைப்படங்களில் தான் தொடர்ந்து நடித்துக்கொண்டிருக்கிறார். அதிலும் குருவி வில்லு திரைப்படங்களின் யதார்த்த்தை மீறிய காட்சிகள் இவர் திறமையை சிறைவைத்துவிட்டன.
இளம் நடிகர்களில் நன்கு நடனமாடக்கூடியவர், பாடக்கூடியவர், ஒரு நகைச்சுவை நடிகர் இல்லாமல் நகைச்சுவை பாத்திரத்தையும் ஏற்கக்கூடியவர் இன்னும் எத்தனை காலத்திற்கு ரசிகர்களை ஏமாற்றப்போகிறார்.

ஒரு ஊடகவியலாளனின் பார்வையில் விஜய்யின் நியாயமற்ற கொந்தளிப்பு கவலைக்குரியது.

# Posté le lundi 16 mars 2009 05:17

Modifié le jeudi 02 avril 2009 03:39